அகவை பத்தில் அழகிய கதிரவன் இணையம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 16, 2019

அகவை பத்தில் அழகிய கதிரவன் இணையம்

அகவை ஈரைந்து கருவொன்று தாய் வயிற்றில்
அல்லும் பகலும் அன்னை கண் விழிப்பாள்
தொல்லை களைந்து உருக்கொள்ளும் காலத்துக்காய்
வல்ல செயல்கள் வரைந்தெழுத வார்த்தெடுத்த
கதிரவன் இணையம் உலாக்காணும் வாழ்வியலில்
பங்கெடுக்க வந்திணைவோம் அகவை பத்தில்
அகங்குளிர்ந்தே********
காலை விடியலில் கரைந்தெழுதும் புள்ளினங்கள்
காலதேவனின் கணக்கியலில் வரைந்திடும் ஓவியங்கள்
கணக்கற்று படைத்திடும் படையல்கள்
கதிரவன்இணையத்தில் வலம்வரும் தினமும் அறிவீரோ
காட்சிகள் ஆலய தரிசனமாய் ஆற்றல் மிகு பேச்சுகளாய்
ஆங்கவர் கண்முன்னே கொடையாகும் காவியங்கள்*****
தித்திக்கும் இசையாகி இசை தரும் கலைஞரையும்
அடையாளம் காட்டிடுமே மேடை
நிகழ்வுகளை
மேன்மை கொள்ள வைதிடுமே
அரசியல் ஆன்மிகம் ஆங்காங்கே தமிழ்தேச
கொடையாளார் தார்மீக கடன் தாங்கி
காலமெல்லாம் காட்சியாகும் கதிரவன் இணையம்
தொலைக்காட்சி தானிணைந்து தரமோடுவாழ்ந்திடட்டும்****
உலகத்தமிழர்களின் ஒளி நாதம்
உண்மைகளை தாங்கி வரும் நம் வேதம்
தனக்கென ஓர் தடத்தை பதித்துவிட்ட நற்காலம்
தன்னிகரில்லா வான்மதி நிலவாய்
தற்கொடை பகரும் ஊடக கலமாய்
தமிழ் தாகம் தீர்க்கும் கங்கா நதி தீரமாய்
தரணி வாழ் காலம் யாவுமே ஒளிர்கவே
அகவை பத்தில் அகங்குளிர்ந்து
வாழ்த்துகிறோம்…வாழிய பலநூறு******
அகவை பத்தில் அழகிய கதிரவன்இணையம்
  • சிவதர்சினி ராகவன் சுவிஸ் –