எம் மூதாதையர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் சாத்தியமற்ற படைப்புகளை உருவாக்கியதாகவும் பல புராணங்கள் கூறுகின்றன.
வெறும் புராணக்கதைகளாக மட்டும் இவற்றினை பார்த்து வருவதனால் பல உண்மைகள் புதைந்து போகின்றன. இராமாயணம், புஷ்பக விமானம், தேவலோக சிற்பி மயன் என பல கதைகள் இன்றும் இதிகாசங்களாக இருக்கின்றன.
இவற்றை இப்போது மெய்யா?, பொய்யா? என பட்டிமன்றம் போடும் நிலையில் இருப்பவர்களே அதிகமே தவிர உண்மைத் தன்மையினை ஆய்வு செய்வது மிகக் குறைவு.
இது ஒரு புறம் இருக்கட்டும். அறிவியல், விஞ்ஞானிகள் பற்றி வரலாறாகட்டும், கல்வி நடவடிக்கைகளாகட்டும் அனைத்திலும் வேறு இனத்தவரே முன்னணிப் படுத்தப்படுகின்றனர்.
எடிசனைப்பற்றியும், நியூற்றனைப்பற்றியும் கற்று கொடுக்கப்படுகின்றதே தவிர அவர்களுக்கு நிகர் அல்லது அவர்களையும் விட அறிவியலில் சிறந்து விளங்கியவர்கள் பற்றி பெரிதாக கூறப்படுவதில்லை.
உதாரணமாக விமானத்தை கண்டு பிடித்தவர்கள் யார்? என்ற கேள்வி எழுந்தால் சட்டென பதில் கூறப்படுவது ரைட் சகோதரர்கள் என்பதே. அதுவே மிகச் சரியான விடை என கற்கை முறையிலும் புகட்டப்பட்டு வருகின்றது.
ஆயினும் அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரத்வாஜர் ரிஷி என்பவர் விமான அமைப்பு முறை பற்றி மிகத் துல்லியமாக விமான சாத்ரா (வைமானிக சாத்ரா) என்ற நூலின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
விமான அமைப்பு, அது எப்படி பறக்கின்றது?, விமானியின் பயிற்சிகள் எப்படி அமைய வேண்டும்?, விமானத்தை உருவாக்க பயன்படுத்த வேண்டிய உலோகம் எது? என்ற அனைத்து தகவல்களையும் மிகச் சரியாக கூறியுள்ளார்.
இது சாத்தியமற்றதான நோக்கினாலும், இந்த நூலினை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் மருத்சவம் எனப்படும் விமானம் 1865 உருவாக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விமானத்தின் மூலம் 2000 அடிகள் உயரத்தில், நீண்ட தூர விமானப்பயணம் செய்யப்பட்டதாகவும் குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆயினும் தற்போது சிமானக் கண்டுபிடிப்புக்கு வேறு ஓர் நபரின் பெயரே கூறப்படுகின்றது.
அதேபோல் இவை வெறும் கதைகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் இவற்றின் உண்மைத்தன்மை பற்றி ஆராயப்படுவதோ? அதற்கு அனுமதிகள் வழங்கப்படுவதோ மிகமிகக் குறைவு என்பதே உண்மை.
இது போன்ற பலவகையாக அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புக்களை எம் மூதாதையர்கள் நிகழ்த்தியதாக அகழ்வாராய்ச்சிகளில் வெளிப்படுத்தப்பட்டாலும் அவை வெளி உலகிற்கு அறிவிக்கப்படுவது இல்லை.
மிக முக்கியமாக விண்வெளி ஆய்வு நிலையமான நாசா பரத்வாஜர் ரிஷியின் புத்தகத்தின் அடிப்படையில் பல ஆய்வுகளை தற்போது செய்து வருவதாக கூறப்படுகின்றது. என்றாலும் தீர்வில் அவர் பெயர் பொறிக்கப்படுமா என்பது சந்தேகமே.
இது போன்று பல வகையான பொக்கிஷங்கள், கண்டுபிடிப்புகளை பண்டைய தமிழர் நிகழ்த்தியிருந்தாலும் கூட அவை மறைக்கப்பட்டு விட்டன, அல்லது அதன் உரிமை வேறொருவருக்கு கொடுக்கப்பட்டு அப்புகழே நிலை நிறுத்தப்பட்டும் வருகின்றது.
இராமாயணத்தில் கூறப்பட்ட புஷ்பக விமானம் கூட பொய் அல்ல எனக் கண்டு பிடிக்கப்பட்டாலும் அதனை அழுத்திக் கூறுகின்றவர்கள் யார்?
இப்படியாக வரலாறுகளும், உண்மைகளும் மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு வருகின்றது. இவை எதற்காக என்ற கேள்வி எழும்போது,
நிரூபிக்கப்பட்ட பின்னரே முடிவு செய்யப்படும் என்ற பதிலே கூறப்படும் ஆனால் நிஜத்தில் நூற்றாண்டுகள் பல கடந்து போனதும் பல உண்மைகள் புதைக்கப்பட்டு விடும்.
காலத்தில் போக்கு மறக்கவைத்து விடுவதோடு மாற்றத்தையும் உருவாக்கிவிடும். அப்போதும் அந்நியர் புகழ் பாடும் நிலை மட்டுமே இருந்து கொண்டு வரும் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
ஏன் தமிழர்கள் கூட அயல்நாட்டாரை சிறப்பாகப் பார்த்து, அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுத்து வருவதனைப் போன்று நம் மூதாதையரின் சிறப்பை எடுத்துக் கூறுவது இல்லை.
அந்தவகையில் தமிழர்களின் பல ஆச்சரியம் மிக்க கண்டு பிடிப்புகள் மறைக்கப்பட்டதோடு, அவற்றிக்கு மாற்றான்கள் சொந்தம் கொண்டாடும் நிலையுமே தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என்பது நாம் அறிந்த உண்மை.
ஆனாலும் மெய்க்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் அனைத்திலும் தமிழர் புகழ் பாடும் கூட்டமொன்றும் எம்மிடையே இல்லாமல் இல்லை.