லண்டனில் நேற்றைய தினம் ஐந்து இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நடந்து இருக்கிறது. லண்டனில் இளைஞர்கள் மீதான கத்திக்குத்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அதனைத் தடுக்கும் வழி முறைகளைக் கண்டறிவதில் பிரித்தானியா அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் லண்டனில் சராசரியாக வாரத்துக்கு ஓர் இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவது குறித்தும் அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பிரித்தானியா அதிகாரிகள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.