இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டதே: கிப் கோட்ஜஸ் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டதே: கிப் கோட்ஜஸ்

இரவுக்கும் – பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கிப் கோட்ஜஸ் என்பவர் தன்னுடைய குழுவுடன் பகல் இரவு நேரம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சிக்காக பல நாடுகள் சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், தாங்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி குறித்து இறுதி அறிக்கையை சைன்ஸ் அட்வான்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், பல இடங்களில் பகலுக்கும், இரவுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் இருக்கிறது. பல இடங்களில் இரவில் கூட மிகவும் அதிக வெளிச்சத்துடன் காணப்பட்டு இருக்கிறது. அதோடு, கடந்த 5 ஆண்டுகளில் 2.5 சதவிகிதத்திற்கும் அதிகமாக பூமியின் ஒளி அளவு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக பகலின் அளவு 1 மணி நேரத்திற்கும் அதிகமாக அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், கிப் கோட்ஜஸ் மேற்கொண்ட இந்த சோதனையில் எந்த நாடுகள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் கூறியுள்ளார். எண்ணெய் வள நாடுகளான துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் இருக்கும் இந்தியா, மலேசியா, சீனா போன்ற நாடுகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காலங்களில் இந்த நாடுகளில் இரவுகளே இல்லாமல், வெறும் பகல் மட்டுமே காணப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரவு – பகல் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது பற்றியும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அவர்களி படி, இதுவரை பயன்படுத்தி வந்த மோசமான விளக்குகளே இந்த விபரீத மாற்றத்திற்கு காரணம் என்றும், புதிய விளக்குகளை கண்டுபிடித்தால் மட்டுமே இனிமேல் இரவை பார்க்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.