பூமியைப் போன்று இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

பூமியைப் போன்று இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு


பூமியைப் போல இன்னொரு கிரகத்தை கனேடிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் K2-18b என்னும் கிரகம் பூமியைப் போல உள்ளதாக, கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகம், பூமியில் இருந்து 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகம் பாறைகளால் ஆனதாக இருப்பதால் இதன் மேற்பரப்பில் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் இருக்கக் கூடும் என்றும், ஏலியன்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கிரகம் மிகவும் துல்லியமான தொலைநோக்கியின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், K2-18b கிரகத்திற்கு அருகில் K2-18c என்ற கிரகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது