சுவிஸில் இந்த நிறுவனத்தில் பணியாற்றுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, March 29, 2019

சுவிஸில் இந்த நிறுவனத்தில் பணியாற்றுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை

சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அமைந்துள்ள Universal Postal Union நிறுவனத்தில் பணியாற்றுவோர் எவ்வித வரியும் செலுத்த தேவை இல்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த நிறுவன ஊழியர்களுக்கு நேரடி வரி அல்லது மண்டலத்தில் செலுத்த வேண்டிய வரி என அனைத்தில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெர்ன் நகரத்தில் அமைந்துள்ள Universal Postal Union நிறுவனத்தில் மொத்தம் 249 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள பணியாளர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், அவர்கள் எந்த வகையான வரியும் செலுத்த தேவை இல்லை.

Universal Postal Union நிறுவனத்தின் வரி விலக்கு உடன்படிக்கையானது கடந்த 1946 முதல் சுவிஸ் அரசாங்கத்துடனும் ஐக்கிய நாடுகள் மன்றத்துடனும் கையெழுத்தாகியுள்ளது.



சுவிட்சர்லாந்தில் இந்த ஒரு நிறுவனம் மட்டுமல்ல ஊழியர்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளது.

மொத்தம் 43 சர்வதேச நிறுவனங்கள் இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டுமின்றி SVP-ம் இந்த விவகாரத்தில் உரிய முடிவை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

Universal Postal Union நிறுவனமானது பெர்ன் நகரில் 1874 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.