உக்ரைனில் குழந்தையை குளிக்க வைப்பதற்காக நீரை கொதிக்க வைத்த தாயின் கவனக்குறைவு சொல்லொண்ணா சோகத்தில் முடிந்திருகிறது.
டெட்யானா தனது குழந்தையை குளிக்க வைப்பதற்காக தண்ணீர் கொதிக்க வைத்திருக்கிறார்.
பின்னர் குளிர்ந்த நீரை சேர்த்து பாத் டப்பில் அதை ஊற்றி, தனது மகன் டானிலை குளிக்க வைக்க எண்ணியிருக்கிறார்.
அவர் கொதிக்கும் நீரை அறையில் வைத்து விட்டு பாத்ரூமுக்கு செல்வதற்கும், மேசை மீது உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த அவரது மகன் அந்த சுடுதண்ணீர் வாளிக்குள் விழுவதற்கும் சரியாக இருந்திருக்கிறது.
பதறி ஓடிச் சென்று மகனை வாரியணைத்து தூக்கி டவலால் மூடும்போதே குழந்தையின் தோல் உரிந்து வந்திருக்கிறது.
விரல்கள் தவிர உடல் முழுவதும் வெந்துபோன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டானில், 11 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறான்.
டானிலின் முதல் பிறந்த நாள் முடிந்து சரியாக இரண்டு நாட்கள் ஆன நிலையில், அவனது உயிர் பிரிந்திருக்கிறது. பொலிசார் சம்பவத்தை விபத்தாக பதிவு செய்திருக்கிறார்கள்.
டானில் இறக்கும்போது அவனருகில் இருந்த அவன் தாயாகிய டெட்யானா, நடந்ததற்காக தன்னையே தன்னால் மன்னிக்க முடியவில்லை என்கிறார்.