ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
இவ்வாறிருக்கையில் புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் வெளியான தகவல் சற்று அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.
அதாவது ஏலியன்கள் உண்மையாகவே காணப்படுகின்றன என மக்கள் தொகையில் அரைப் பங்கினர் நம்புகின்றனர் என்பதே அந்த அதிர்ச்சி தகவல்.
ஆய்வுக் குழு ஒன்று 24 நாடுகளில் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
சுமார் 26,000 பேர் வரையானவர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டுள்ளதுடன் அவர்களில் 47 சதவீதமானவர்கள் ஏலியன்கள் புத்திக்கூர்மையானவை என தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று 61 சதவீதமானவர்கள் ஏலியன்கள் உண்மையாகவே காணப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.