கனவில் பொறி தட்டியது என்ற ஓர் சொல்லை நாம் கேள்வி பட்டுள்ளோம் இதன் அர்த்தம் என்ன? டாக்டர் அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று கூறியுள்ளார்.
அவரது கருத்து என்ன? கனவைப்பற்றி இது வரை கேள்வி பட்டதனை விடவும் ஆச்சரியமான விடயங்கள் இப்போது வெளிவந்துள்ளன.
அதில் பிரதானமானது இந்தக் கனவு பற்றிய ஆய்வுகள் 4000 வருடத்திற்கு முன்னரே தொடங்கப்பட்டுள்ளது அதற்கான சான்று இருப்பதாக ஆய்வாளர்கள் தெரவித்துள்ளனர்.
எமது புராண கதைகள் அனைத்திலும் கனவு பற்றி கூறப்பட்டுள்ளன கனவில் உதித்தது அப்படியே பலிக்கின்றது, சிக்கலான விடயங்களுக்கு கனவு பதில் தருகின்றது என்பது வரலாறுகள் கூறுகின்றன.
கனவில் வருவது யார்? கடவுளா? கணிதமா? மனிதர்களுக்கு கனவில் தீர்வு கிடைத்து அது வரலாறாகிப் போன சம்பவங்கள் பல உள்ளன ஆனாலும் இன்று வரை கனவு ஓர் மர்மம்.
கிரேக்க நாட்டில் ஈஸ்க்யூலேப்பிஸ் எனப்படும் ஆலயத்தில், மென்ட்டேஷன் Mentation சிகிச்சை என்ற ஒன்று பின்பற்றப்பட்டது. கோயிலில் தங்க வைக்கப்படும் நோயாளிகளுக்கு கடவுள் கனவில் வந்து சிகிச்சை கொடுத்ததாக கூறப்படுகின்றது. .இதன் படி மருத்துவத்தோடு கனவு இணைகின்றது.
மாவீரன் அலெக்ஸாண்டர் கனவின் மூலமே உலகை வென்றுள்ளார் எனவும் வரலாற்று தகவல் கூறப்படுகின்றது. அப்படி என்றால் அவரின் வீரத்தின் பின்னால் கனவு உள்ளதா?
உலகை ஆள ஆசை கொண்ட பேரரசன் அலெக்சாண்டர் பொனீஷிய நாட்டின் டைர் Tyr நகரத்தின் மீது போரைத் தொடுத்தார். டைர் வீரர்கள் சளைத்தவர்கள் அல்ல அலெக்ஸாண்டரின் படைக்கு கடுமையாக எதிர்ப்பு கிடைத்தது.
ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்தது போனது அலெக்ஸாண்டரின் படை. அப்போது போர்க்கால இரவு ஒன்றில் அலெக்ஸாண்டரின் கனவில் பாதி மனித உடலும், பாதி ஆட்டின் உடலும் கொண்ட உருவம் Satyros தோன்றி தங்கக் கேடயத்தின் மீது நடனமாடியுள்ளது.
கனவின் அர்த்தம் புரியாத அலெக்சாண்டர் அரிஸ்டான்ந்தர் எனும் தத்துவ ஞானியை வரவழைத்து அர்த்தம் கேட்டுள்ளார். Satyros – Sa Tyros. Sa என்றால் உன்னுடையது டைர் நகரம் உன்னுடையது எடுத்துக்கொள் என்பதே கனவின் அர்த்தம் என அவர் மூலம் பதில் கிடைத்துள்ளது.
அதன்பின் உற்சாகத்திலும், நம்பிக்கையிலும் புது வேகத்தோடு போரிட்டு வெற்றி பெற்றுள்ளார் அலெக்சாண்டர். இங்கு அவர் வெற்றிக்கு காரணம் கனவே.
அதேபோல் ஜூலியஸ் சீசர் கொல்லப்படுவதற்கு முன்னைய தினம் , அவரது மனைவி கல்பூர்னியாவிற்று சீசரின் உடலெங்கும் துளைகள் ஏற்பட்டு, அவற்றிலிருந்து ஊற்று போல் ரத்தம்வருவதைப் போல் கனவு ஏற்பட்டுள்ளது.
இவை தவிர இந்தியாவின் கணித மேதையான ஸ்ரீனிவாச இராமானுஜன் தனது சிக்கலான கணித கேள்விகளுக்கு கனவின் மூலமே பதில் கண்டுள்ளார்.
அதேபோல நியூட்டனும் கூட கனவின் மூலமே தனது அறிவியல் கேள்விகளுக்கு பதில் பெற்றுக் கொள்வாராம் அவருடைய நாளேடு இதனை உறுதி செய்துள்ளது.
ஆக கனவு என்பதும் ஒரு வகையில் கணிதத்தோடு தொடர்பு பட்டதாகவே ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஆழ்மனதின் எண்ணம் கனவு என்றால் பிரச்சினைக்கு தீர்வு எம்மிடமே உள்ளது என்பதையும் கண்டு பிடித்துள்ளனர்.
இது மட்டும் அல்லது கணிதம் மனிதர்கள் தோன்றும் முன்னரே தோற்றம் பெற்று விட்டதாகவும். இந்த பிரபஞ்சத்தின் அடிப்படையே கணிதம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்சம் தோற்றம் பெற்றதும் கணிதத்தின் அடிப்படையே. அண்டம் இயங்குவதும், கோள்கள் சுற்றிவருவதும் பரிமானம் உட்பட, உலக இயக்கம் அனைத்திலும் கணிதமே நிற்கின்றது.
அதே போல கனவு என்பதும் கணிதம் சார்ந்தது அது மூளையின் ஓர் செயற்பாடு கனவுனர்த்திகள் (முன்னெச்சரிக்கை கனவுகள்) போன்றனவற்றை செயற்கையாக உருவாக்க முடியும் எனின் எதிர்காலம் தெரிய வரும்.
அத்தோடு உலகில் பல்வேறு விதமான சாதனைகளை படைக்கலாம் என்ற நம்பிக்கையை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதாவது உலகில் பல விஞ்ஞானிகளின் படைப்புகளுக்கு கனவு உதவி உள்ளது.
இத்தகைய கனவு அவர்களுடைய மூளையில் உதிக்க அடிப்படை என்ன? ஒவ்வோர் கனவும் ஏதோ ஓர் சிக்கலான கணிதத்தை கொண்டதே அதனால் கணிதம் மூலமாகவே அதற்கு விடை காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி பார்க்கும் போது மாவீரன் அலக்ஸாண்டருக்கு உதவிய கனவே கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜனுக்கும், நியூட்டனுக்கும் உதவி செய்துள்ளது. இந்தவகையில் பார்க்கும் போது இவர்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் இணையானவர்களே.
ஆக மொத்தம் மூளையின் சிக்கலான விடயங்களை கனவுடன் தொடர்பு படுத்தி அதற்கு விடை காண்பது மட்டும் இன்றி செயற்கையான வகையில், எதிர்வு கூறும் கனவுகளை உருவாக்க கணிதத்தால் உதவ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இது சற்று குழப்பமாக இருந்தாலும் கணிதமே இயக்கம் அதனால் முடிவிலியான கணிதத்தை கனவுடன் தொடர்பு படுத்தினால் வியக்கத்தக்க சாதனைகளை மனித இனம் படைக்க தயாராகும் எனவும்.,
அதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் புது உலகம் விடைவில் படைக்கப்படும் அது கனவின் நிஜ உலகமாக அமையும் என்பது திண்ணம்.
அதனால் கனவு கான முயற்சி செய்வோம் எதிர்காலத்தை எம்மாலும் முடிவு செய்ய முடியுமே..