ஈழ மண்ணில் ஓர்
இமயம் சரிந்தது
இதழியல் துறையில்
இடைவெளி பிறந்தது.
இதழியல் துறையில்
இடைவெளி பிறந்தது.
வாழ்ந்தவர் மறைவது
வழக்கமே யாகினும்
இழந்தது என்னவே
ஈடிணை யற்றது.
வழக்கமே யாகினும்
இழந்தது என்னவே
ஈடிணை யற்றது.
ஆண்டுகள் ஐம்பதாய் ஆண்டவர் உண்டு
எழுதியவர் உண்டோ?
இருந்தவர் ஒருவரே – இன்று
இழந்தோம் உம்மையும்.
எழுதியவர் உண்டோ?
இருந்தவர் ஒருவரே – இன்று
இழந்தோம் உம்மையும்.
கோபு என்றால் கோபம்
கொஞ்சுவது அவர் சுபாவம்
குறுந்தாடி முகத்தோடு
கொண்டார் அவர் கோலம்.
கொஞ்சுவது அவர் சுபாவம்
குறுந்தாடி முகத்தோடு
கொண்டார் அவர் கோலம்.
எத்தனை இரவுகள்?
எத்தனை பொழுதுகள்?
அத்தனை நொடிகளும்
அமிழ்தமாய் இனித்தவை.
எத்தனை பொழுதுகள்?
அத்தனை நொடிகளும்
அமிழ்தமாய் இனித்தவை.
பேச்சிலும் சிருங்காரம்
சிரிப்பிலும் சிருங்காரம் – உன்
எழுத்தில் மட்டுமே
இருந்தது பெருங் காரம்.
சிரிப்பிலும் சிருங்காரம் – உன்
எழுத்தில் மட்டுமே
இருந்தது பெருங் காரம்.
சொற்சுவை, பொருட்சுவை
சொந்தமாய் வாய்த்தவை – உன்
பொக்கைவாய் திறந்தால்
மொத்தமும் அருஞ்சுவை
சொந்தமாய் வாய்த்தவை – உன்
பொக்கைவாய் திறந்தால்
மொத்தமும் அருஞ்சுவை
மட்டிலே பிறந்து – யாழ்
மண்ணிலே தடம் பதித்து
தலைவன் கையால் பரிசு பெற
தலை நிமிர்ந்தோம் நாமும்
மண்ணிலே தடம் பதித்து
தலைவன் கையால் பரிசு பெற
தலை நிமிர்ந்தோம் நாமும்
தமிழை நீ வளர்த்தாய்
தமிழ் உன்னால் வளர்ந்தது – அந்தத்
தமிழ் தள்ளாடும் காலத்திலே
நீ காணாமல் போனதேனோ?
தமிழ் உன்னால் வளர்ந்தது – அந்தத்
தமிழ் தள்ளாடும் காலத்திலே
நீ காணாமல் போனதேனோ?
உன் நினைவால் வாடுகிறோம்
உன் பிரிவால் ஏங்குகிறோம்
எம் இதயத்து நினைவுகளை
இதழ் கொண்டு தூவுகிறோம்.
உன் பிரிவால் ஏங்குகிறோம்
எம் இதயத்து நினைவுகளை
இதழ் கொண்டு தூவுகிறோம்.
சிவராம் ஞாபகார்த்த மன்றம், சுவிஸ்