மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்மித்த வந்தாறுமூலை அம்பலத்தடியில் பிள்ளையார் கோயில் அருகில் விபத்து இடம்பெற்றது. மோட்டார்சைக்கிள்கள் மோதியதில் காயமடைந்தவர்கள் தப்பிக்க முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர்.
காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.