வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்து இன்றைய நாடாமன்ற அமர்வில் கருத்து வெளிடப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மைக்காலமாகவே வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து சிறுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், வடக்கில் அண்மைக்காலமாகவே சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
மேலும், கடந்த இரண்டு வருடங்களில் வடக்கில் 22 சிறுவர் கடத்தல் சம்பங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டில் மாத்திரம் 11 சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
வடக்கில் இவ்வாறு அதிகரித்துள்ள சிறுவர்களுக்கு எதிரான சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமாக இருந்தால், சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.