கணணி வழி உறவிலே கருக்கொண்ட கதிரவன்!!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 16, 2019

கணணி வழி உறவிலே கருக்கொண்ட கதிரவன்!!!

இணையத்தில் உதித்து உலாவந்து தமிழ் மக்கள்
இதயத்தில் இடம்பிடித்த கதிரவன் இணைய தளத்தின்
பத்தாண்டு நிறைவில் அவர்களை இன்முகத்தோடு
பாரிலே எங்கள் தமிழ் ஊடக சொத்தாக வரவேற்று
,,,,வாழ்த்தும் வாழ்த்துப்பா ,,, ,,,,,
கார் மேக இருள் அகற்றி
ஊர் தோறும் (உ )பயிர் வளர்த்து
பார் மேவி ஒளி கொடுக்கும்
பகலவனின் நாமம் தாங்கி
பாரெல்லாம் செய்தி சொல்லி
பாச உறவுகளை இணைத்து நிற்கும்
இணைய குரல் கதிரவனுக்கு எந்தன்
இதயத்தில் இருந்து நல் வாழ்த்துக்கள்,,,
கணணி வழி உறவிலே
கருக்கொண்ட கதிரவன்
அலைவரிசைகளிலும்
ஆழமாக தன் அதிசய
கரங்களை பதித்து நின்று இன்று
கதிரவன் கடமையை
ஒளி அலைகளிலும் எம்
தாயான தமிழ் மொழி அழகு ஊட்டி
வழங்கிகொண்டிருக்கிறார்கள்
ஓயாத அலைவரிசையாக
ஒளிர்கின்ற கதிரவனை வரவேற்று
வாழ்த்துகின்றோம் வாழ்க வளர்க ,,,,
ஆண்டுகள் பத்து
அலைவரிசைகளில்
ஆழமாக ஓடி ஓடி
ஆன்மிகம் அறிவியல்
அரங்கியல் அழகியல்
அரசியல் விளையாட்டு என
விந்தைமிகு உலகில்
விரிகின்ற செய்திகளை
பந்தை போல் உருண்டு சுழன்று
பதிவெடுத்து சொல்கின்றார்கள்
ஊடக நெறி தழுவி
உலக மாந்தர் நலன்கருதி
தத்துவங்கள் சொல்வதோடு
சித்து விளையாட்டையும்
சிந்தனைக்கு எடுத்து
சிறப்பாய்வு செய்து
முத்தான கருத்துக்களை
முழங்கி சொல்வதோடு
பத்தாண்டு ஊடக வாழ்வில்
பக்குவமான சொல்லாடலில்
மூட நம்பிக்கைகளின்
முதுகெலும்பையும்
முயற்சியால் உடைத்து
ஆழமான அறிவால்
சரித்திர ஆய்வுகள் செய்து
சமகால நிகழ்வுகளும் சொல்லி
சிறப்புடன் இணைய உலாவரும்
சிற்பிகளே கதிரவன் சிற்பிகளே
வாழ்க வளர்க ,,,,,,வாழ்க வளர்க ,,,,,,
சிவமேனகை சுவிற்சலாந்து