கதிரவனே கலைமகளின் தலைமகனே
தமிழ் உலகின் உயர்ந்த ஒளி நாதமே
திமிராய் திசையெட்டும் உள்ள உன்மைகளை
திரண்டெடுத்து தித்திப்பாய் தமிழர் மனஙகளில் தினித்திடும்
தீரனாய் திகழும் எம் கதிரவனே வாழ்க பல ஆயிரம் ஆண்டு
ஈரைந்து ஆண்டுகள் இறுமாப்போடு இழுத்து வந்தாய்
இதமான செய்திகளை இருட்டடிப்பை தவிர்த்தாய்
இதனால் இழந்தாய் இருட்டடிப்பாளர்களை
இதயமுள்ளோர் இன்புற்றனர் இணைந்தனர்
ஈடுஇணையில்லா வாசகர்கள் பலர்
வீட்டுக்கொரு இணையத்தளமாய் விளம்பர பக்கஙகளோடு பல பாரினில்
பக்கஙகளில் நீ பலதும் பத்துமாய் பல் சுவையாய் பாரினில் பாதை வகுத்தாய்
பகுத்தறிவா பாலகர் பாமாலையா மங கையர் மலரா மானிடர் ஆரோக்கியமா
மட்டுப்படுத்தப்பட்ட மன்மத விளக்கமா வி\ஞ்ஞனமாஅஞ்ஞனமா ஆன்மீகமா
அனைத்தினையும் அள்ளித்தருபவன்நீ ஆயிரம் வருடம் ஒளிவீசுவாய்
ஆண்டதமிழன் கண்ட நூல்கள் ஆயிரம் நாம் கண்ட காலத்தில்
களத்தோடு கதை சொன்ன செய்தித்தாள்கள் சில
சுதந்திரன் ஈழநாடு உதயனோடு உன்னையும் நான் இணைத்திட்டேன்
கதிரவனே நீயும் களத்தோடு நின்றாய் காவுகொண்டவர் காவியம் சொன்னாய்
கன்னிவெடியோடு களம் கண்ட கன்னியர் கதை சொன்னாய்
களத்தில் நின்றவர் நிஜத்தை நிலத்திலும் புலத்திலும் சொன்னாய்
நித்தம் நினைவுகளை சொல்ல கதிரவனே நீ வாழ வேண்டும் ஓராயிரம் ஆண்டு
ஈரைந்து மாதம் கருப்பையில் கருவிற்கு சுகமான சுகம்
ஈரைந்து மாதம் கருவை சுமந்த தாய்க்கு சுகமான சுமை
ஈரைந்து வருடம் கதிரவனை சுமந்த தாயின் சுமையோ
சுகமான சுமையாய் சுவைபெற சுற்றும் பூமியோடு
நாமும் சுழன்று சுவைத்திடுவோம் கதிரவனை நாமும்
கதிரவன் பல்லாண்டு காலம் உலகத்தமிழர்களின்
மனஙகளில் நிலைத்திட இறைவனை பிராத்திப்போம்!!!
அன்போடு அரியபுத்திரன் நிமலன்