ஓ…. திலீபா - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, March 18, 2019

ஓ…. திலீபா

ஓ திலீபண்ணா
நீ வாடி உதிர்ந்த
வாசனை மலரல்ல
மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக
வாதாடிய காவிய நாயகன்
தேரோடும் நல்லை நகர் வீதியிலே
ஈராறு நாட்களாக
உண்ணாத நோன்பிருந்தாய்
உயிர் தன்னை பலியிடவே
தண்ணீரும் இன்றி
தமிழுக்காய் தலை சாய்ந்து
காந்தியும் புத்தனும் பிறந்த நாடு
கருணையும் அன்பும்
பொழிந்த நாடு
சாந்தியும் சத்தியமும்
அகிம்ஷயுமே சாதனை
காட்டிய பாரதமாம்
பாரதம் இருந்தொரு
படை வந்தது
பார்த்து மகிழ்ந்து
இளநீர் வெட்டி உபசரித்து
கன்று பசுவை
கண்டது போல் களித்திட்டோம்
அமைதி தேட வந்தோம்
ஆக்கிரமிப்பு தேவையா? என்றாய்
பொங்கினாய் பொறுக்காமல்
போரிடவே துணிந்து கொண்டாய்
காந்தியிலும் வென்று விட்டாய்
பெரும் காவியமே படைத்து விட்டாய்!