யார் இந்த மாவீரர்கள்….! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

யார் இந்த மாவீரர்கள்….!

யார் இந்த மாவீரர்கள்….
எம்முடன் பிறந்தவர்கள்
ஒன்றாய் வளர்ந்தவர்கள்
ஓற்றுமையாய் பாடம் படித்தவர்கள்
ஓருமனதாய் தமிழ் பற்றில் மிதந்தவர்கள்
ஆசைகள் இவர்க்கும் அதிகமுண்டு
ஆன்ம பலம் நிலைத்ததுண்டு
அன்னை மீது அதிக பற்றுண்டு
அன்னை தேசத்தை அதிகம் நேசித்ததுண்டு
வெற்றிப்பாசறைகள் பாசறைகள் பலகண்டு
குத்திக்குதறியே பகை வென்று
சக்தியோடு சந்ததி உயர்வென்று
இதய சுத்தியோடு இவர் சென்றார்
பற்றுப்பாசம் இவர்க்குமுண்டு
பாசறை நெருக்கம் அதிகமுண்டு
எல்லை யாவும் காவல் காத்த
எல்லைச்சாமி தான் இவர்கள்
மரணம் வென்ற மாவீரர்கள்
மண்ணை நேசித்த மறவர்கள்
மனதோரம் இவர் தியாகம் பாடிடவே
ஒளிச்சுடராகி விழி மலரும் இன்னாளிலே
– ராகவி –