சரத்பொன்சேகா படைத்தளபதியாக இருந்தகாலத்தில் அவரின் வழிநடத்தில் படையினர் மிகப்பெரியளவிலான போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள் இப்போது அவர் பரிசுத்தவராக தன்னை காட்ட முயற்சிக்கின்றார்.
ஒருபோதும் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துளைக்கபோவதில்லை என்பது தான் உண்மை என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜ.நாவின் கால அவகாசம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசியக்கூட்டமைப்பும் சில புலம்பெயர் அமைப்புக்களும், கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியன பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் கால அவகாசம் வழங்கும் செயற்பாட்டினை ஜ.நாவில் உள்ள நாடுகள் முன்னெடுத்துள்ளன.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிவேண்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லும் முயற்சிகள் கூட்டமைப்பினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை கண்டறிவது தொடர்பிலும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன இதற்கெல்லாம் கூட்டமைப்பினரே காரணம்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா படைகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என பீல்மார்சல் சரத்பொன்சோக சொல்லிவரும் நிலையில் அவ்வாறு போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் சரத்பொன்சேகாவும் தூக்கு மேடைக்கு செல்லவேண்டிவரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.