தேவிப்பிரியாவின் கண்களை மறைத்த காதல்...பெத்த தாயையே கொடூரமாக கொலை செய்த சம்பவம்... - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 29, 2018

தேவிப்பிரியாவின் கண்களை மறைத்த காதல்...பெத்த தாயையே கொடூரமாக கொலை செய்த சம்பவம்...

தாயின் வயிறு, மார்பு பகுதிகளில் குத்தி கொன்றது தேவிப்பிரியாதானாம். அந்த இரு நண்பர்களும் பானுமதியின் வாயை மட்டுமே பொத்தினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-ஆவது தெருவை சேர்ந்தவர் திருமுருகநாதன். 

இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி (50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களது 2-ஆவது மகள் தேவிப்பிரியா (19), பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் (24) என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

தேவிப்பிரியாவின் காதல் விவகாரம் பானுமதிக்கு தெரியவந்தது. இதனால் அவரை பானுமதி கண்டித்தார். எனவே சுரேஷுடன் சேர்ந்து வாழ முடியாது என தேவிப்பிரியா கருதி, இதை சுரேஷிடமும் கூறினார். பின்னர் சுரேஷும் பானுமதியை தீர்த்து கட்டிவிடலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.

பின்னர் தேவிப்பிரியா தன்னை வந்து அழைத்து செல்லுமாறு சுரேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னால் வரமுடியாது என்று கூறி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரை சேர்ந்த விக்னேஷ், திருபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் ஆகியோரை தேவியின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

அவர்கள் இருவரும் வந்தவுடன் தேவிப்பிரியா பெட்டி படுக்கையுடன் வெளியே செல்ல முயற்சித்தார். இதற்கு தாய் பானுமதி அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தேவிப்பிரியா, பானுமதியின் வாயை பொத்தி கொள்ளுமாறு விக்னேஷிடமும் அஜித்திடமும் கூறினார்.

பின்னர் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு பானுமதியின் வயிறு, கழுத்து, மார்பு பகுதிகளில் தேவிப்பிரியா சரமாரியாக குத்தினார். இதில் சரிந்து விழுந்தார் பானுமதி. விக்னேஷ், அஜித் இருவரும் தப்பியோடிவிட்டனர். அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். இதனால் தேவிப்பிரியாவும் ஒன்றும் தெரியாதது போல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விட்டார்.

இதனிடையே தப்பி ஓடிய விக்னேஷ், அஜித்துக்கு அப்பகுதியை விட்டு வெளியேற வழித் தெரியவில்லை. இதனால் அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் வழி கேட்டுள்ளனர். அப்போது சட்டையில் ரத்தக் கறை படிந்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

அதற்குள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானுமதி சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார். 10 மாதம் சுமந்த வயிறு, 24 மாதங்கள் பால் குடித்த மார்பு ஆகிய பகுதிகளில் தேவிப்பிரியா குத்திக் கொன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவிப்பிரியா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காதலன் சுரேஷும் கைது செய்யப்பட்டுவிட்டார்.