3 மனைவிகள், மாதம் 4 லட்சம் சம்பாத்தியம்... பிச்சை எடுத்தாலும் செம ஹேப்பி அண்ணாச்சி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 29, 2018

3 மனைவிகள், மாதம் 4 லட்சம் சம்பாத்தியம்... பிச்சை எடுத்தாலும் செம ஹேப்பி அண்ணாச்சி

தமிழ் படங்கள் பலவற்றில் நீங்கள் இந்த காமெடியை கண்டிருக்கலாம். பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நபரிடம் ஆயிரங்களில் பணம் புரளும். அட எப்படிப்பா இம்புட்டு பணம் என காமெடி காட்சிகள் நகரும். முக்கியமாக மருதமலை படத்தில் அர்ஜுன், வடிவேலு போண்டா மணி காமெடியை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக காண முடியும். இது சினிமாவில் மட்டும் நிகழும் காட்சி அல்ல. நிஜத்திலும் சில பிச்சைக் காரர்கள் இலட்சங்களில் சம்பாதித்து வருகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அப்படிப் பட்ட ஒரு பிச்சைக் காரர் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.

ஜார்கண்டில் இருக்கும் சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில் சோட்டூவை எப்போது போனாலும், பார்க்க முடியும். சில ரயில்கள் கூட இங்கு வாரத்திற்கு ஒருமுறை, இருமுறை தான் வரும். ஆனால், சோட்டூ வாரம் முழுக்க தினம் தவறாமல் வருகிறார். இந்த ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் பலர் மாறினாலும், இந்த ரயில் நிலையத்தை விட்டு மாறவில்லை சோட்டூ.

யார் இந்த சோட்டூ? இவர் ஒரு பிச்சைக் காரர். சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில் தினமும் பிச்சை எடுப்பது தான் இவரது வேலை. அட, பிச்சைக் காரனா... என ஏளனமாக எண்ண வேண்டாம். ஏனெனில், சோட்டூவின் மாத வருமானம் முப்பது, நாற்ப்பது ஆயிரங்களை தாண்டுகிறது. இவருக்கு கடைகள் எல்லாம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சோட்டூ வெறும் பிச்சைக் காரர் மட்டுமல்ல, இவர் வெஸ்ட்ஜ் (Vestige ) எனும் சுய சுகாதார பொருட்களை (Health and Personal Care Products) விற்கும் மெம்பராகவும் இருந்து வருகிறார். சோட்டூ விற்கு கீழ் உடல் இயங்காது. இவரால் நடக்க முடியாது. தற்போது சோட்டூவிற்கு நாப்பது வயதாகிறது. சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில் வரும் எல்லா ரயில் பயணிகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் சோட்டூ, தனது ரிலாக்ஸ் நேரத்தில் மொபைல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஏறத்தாழ தனது பல வேலைகள் மூலம் ஒரு வருடத்திற்கு நான்கு இலட்சம் வரை சம்பாதிக்கிறார் சோட்டூ. இந்த வருமானத்தை வைத்து, சிம்தேகா (Simdega) எனும் மாவட்டத்தில் இருக்கும் பந்தி (Bandi) எனும் கிராமத்தில் சொந்தமாக பாத்திரக் கடை வைத்துள்ளார் சோட்டூ.

சோட்டூவிற்கு மொத்தம் மூன்று மனைவிகள். இவர்கள் மூவரும் இவரது தொழில் மற்றும் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்கள். மனைவிகளுக்கு ஒரு குறையும் வைப்பதில்லை சோட்டூ. ஒவ்வொருவருக்கும் மாதாமாதம் எவ்வளவு பணம் வேண்டுமோ, அதை தவறாமல் கொடுத்துவிடுகிறார் சோட்டூ.

வெஸ்ட்ஜ் உறுப்பினர் என்ற பெயரில் சோட்டூவுக்கு ஐ.டி. கார்டு கூட இருக்கிறது. பிச்சை எடுப்பது, வெஸ்ட்ஜ் உறுப்பினராக இருந்து சுகாதாரப் பொருட்களை விற்பது மற்றும் பாத்திரக் கடை வியாபாரம் என ஏகபோகமாக வாழ்ந்து வருகிறார் சோட்டூ. இதற்கெல்லாம் மூலதனம் பிச்சை எடுத்த பணம் தான் என்றாலும், அதில் சோட்டூவின் உழைப்பும் அதிகமாக இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எப்போதும் தனது சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் வெளியே பேசமாட்டார் சோட்டூ. வெகு சிலரிடம் மட்டுமே தனது சொந்த வாழ்க்கை மற்றும் இதர தொழில் குறித்துத் தெரிவித்துள்ளார். சோட்டூ. இவரது வீடு போட்கா எனும் கிராமத்தில் இருக்கிறது, அங்கே தான் இவரது மனைவியரும் வாழ்ந்து வருகிறார்கள் என கூறப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ் உடல் ஊனமாக இருப்பவர் சோட்டூ. இவர் ஆரம்பத்தில் பசியின் காரணமாகவே இந்த ரயில் நிலைத்திற்கு பிச்சை எடுக்க வந்துள்ளார். ஆனால், அப்போது இவர் ஒரு நாளுக்கு 1,000 - 1,200 ரூபாய் வரை பிச்சை மூலம் வருமானம் ஈட்டியுலாளர். அதன் பிறகு, இவரது வாழ்க்கை மாறியது, மூன்று திருமணம், வருடம் நான்கு லட்சம் வருமானம் என இப்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் சோட்டூ.

உண்மையில் இதுப் போன்ற சம்பவம் என் வாழ்விலும் நடந்துள்ளது. எங்கள் ஏரியாவில் இருந்த கோவில் வெளியே பிச்சைக்கார தாத்தா ஒருவர் திடீரென பகல் 10.30 மணியளவில் இறந்து கிடந்தார். அவரை யாரும் தீண்டக் கூட வரவில்லை. போலீஸ் வரவழைத்து வரை அப்புறப்படுத்த அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வந்து அவரது உடைமைகளை எடுத்து ஜீப்பில் வீசும் போது ஒரு மூட்டையில் இருந்து செல்லரித்துப் பணக்கட்டுகள் உதிரிந்து கீழே விழுந்தன. அனைவருக்கும் அதிர்ச்சி.

உடனே அங்கிருந்த போலீஸ் மற்றும் மக்கள் உட்பட அனைவரும் அதை எடுத்து கணக்கிட ஆரம்பித்தனர். செல்லரித்துப் போன பணத்தை தவிர்த்து, செல்லும் வகையில் இருந்த பணத்தின் மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட ஐந்து இலட்சத்தை எட்டியது. அந்த ஐந்து இலட்சம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பிறகு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு ஏன் அவர் கோவில் வாசலில் பிச்சை எடுத்தார் என்பது மட்டும் அன்றில் இருந்து இன்று வரை பெரும் கேள்வியாக விளங்கி வருகிறது.