தென்னிலங்கையின் தங்காலை குடாவெல்ல துறைமுகத்தில் இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் டீ56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட பிரச்சினைக்கமைய இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் ஒருவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.