யாழில் தமிழின தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர் பல்கலை மாணவர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 26, 2021

யாழில் தமிழின தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர் பல்கலை மாணவர்கள்!


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள், அவரது உருவ படத்திற்கு முன்பாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக்கழக சூழல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் இராணுவத்தினர் ,பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , பல்கலைக்கழகத்தினுள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.