ஏர்போர்ட்டில் உதைத்த நபர் யார், என்ன நடந்தது?: உண்மையை சொன்ன விஜய் சேதுபதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 8, 2021

ஏர்போர்ட்டில் உதைத்த நபர் யார், என்ன நடந்தது?: உண்மையை சொன்ன விஜய் சேதுபதி

 


விமான நிலையத்தில் ஒருவர் ஓடி வந்து பின்னால் இருந்து உதைத்த விவகாரம் பற்றி விஜய் சேதுபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி நடந்து சென்றபோது அவருடன் வந்த நடிகர் மகா காந்தியை ஒருவர் ஓடி வந்து பின்னால் இருந்து உதைத்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த நபர் விஜய் சேதுபதியை தான் எத்தினார் என்று முதலில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

விமான நிலைய சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது, ஒன்னும் பெருசா நடக்கல, அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்ததால் சின்ன விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுவிட்டது. தாக்கிய நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பிரச்சனை தீர்க்கப்பட்டது என்றார்.

தற்போது செல்போன் வைத்திருக்கும் அனைவரும் இயக்குநர்கள் தான். தாக்கிய நபர் குடிபோதையில் இருந்தார். மேலும் மாஸ்க் அணிந்திருந்ததால் அவர் போதையில் இருந்தது தெரியவில்லை. அவர் என் ரசிகர் இல்லை. எங்களுடன் வாக்குவாதம் செய்தார். விமானம் தரையிறங்கியும் வாக்குவாதம் தொடர்ந்தது என்று விஜய் சேதுபதி மேலும் தெரிவித்தார்.

நான் பாதுகவாலர்களுடன் பயணம் செய்வது இல்லை. என் நெருங்கிய நண்பரை மட்டுமே அழைத்துச் செல்வேன். 30 ஆண்டுகளாக அவர் எனக்கு நண்பர். தற்போது என் மேனேஜரும் கூட. யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாவலர்களுடன் செல்ல விரும்பவில்லை. எனக்கு மக்களை சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்றார் விஜய் சேதுபதி.