வர்ராரு...வர்ராரு... அண்ணாத்த : ரஜினிக்காக இலங்கை பாடலாசிரியர் வெளியிட்ட... - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 22, 2021

வர்ராரு...வர்ராரு... அண்ணாத்த : ரஜினிக்காக இலங்கை பாடலாசிரியர் வெளியிட்ட...இலங்கை கவிஞரின் வரிகளில் உருவாகியுள்ள அண்ணாத்த புரமோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் கவிஞராக திகழ்பவர் பாடலாசிரியர் அஸ்மின். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கவிஞர் அஸ்மின் எழுதிய இரங்கல் கவிதையான ‘வானே இடிந்ததம்மா’ என்ற சோகப்பாடல் உலகில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களிலும் வெளியாகி, மக்களின் விழிகளை குளமாக்கியது.

இலங்கை அரசின் சிறந்த கவிஞருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள கவிஞர் அஸ்மின், அந்நாட்டில் உள்ள தமிழர்களால் ‘இளைய வைரமுத்து’ என்று பிரியமாக அழைக்கப்படுகிறார்.

இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனியின் நடிப்பில் வெளியான ‘நான்’ திரைப்படத்துக்காக புதுமுக கவிஞரை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் சர்வதேச அளவில் ‘புதிய பாடலாசிரியருக்கான தேர்வு’ போட்டியொன்று நடத்தப்பட்டது. சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் கவிஞர் அஸ்மின் இயற்றிய ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ என்ற பாடல் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றது.

அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களுக்கான பாடல்களை எழுதியுள்ள கவிஞர் அஸ்மின், தனது ‘யூடியூப்’ சானலின் வாயிலாக ஏராளமன தனியிசைப் பாடல்களையும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை வரவேற்கும் வகையில் ரஜினிக்கான ‘என்ட்ரி சாங்’ பாணியில் ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த – நீ இனிமேலும் முடியாது ஏமாத்த’ என்னும் பாடலை கவிஞர் அஸ்மின் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அரண்மனை 3 அருமையாக இருப்பதாக பாராட்டினாரு… உதயநிதி குறித்து சுந்தர் சி மகிழ்ச்சி! அரண்மனை 3 அருமையாக இருப்பதாக பாராட்டினாரு… உதயநிதி குறித்து சுந்தர் சி மகிழ்ச்சி!

இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து மேலும் சிலருடன் பாடியுள்ள இந்த ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த’ பாடல்கு சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.