கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு - கொதித்தெழுந்த பிரதேசவாசிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 22, 2021

கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு - கொதித்தெழுந்த பிரதேசவாசிகள்!

 


கடுவலை பொலிஸாரினால் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நியாயமான நீதி விசாரணை ஒன்றை கோரி வெலிஹிந்த பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.


இரண்டு நாட்களாக தடுத்து வைத்து குறித்த இளைஞனை தாக்கியதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வெலிஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நகை பறிப்பு சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய குறித்த இளைஞன் கடுவலை பொலிஸாரால் கடந்த தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.