நாடு தழுவிய முடக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - Breking News Updates - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 6, 2021

நாடு தழுவிய முடக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - Breking News Updates

 நாட்டில் நிலவி வரும் கோவிட் - 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆனால் சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அத்துடன் பொதுக் கூட்டங்களில் கூடுபவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ஜெனரல் சில்வா கூறியுள்ளார்.


மேலும், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதுடன், வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் இராணுவ தளபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


முதலாம் இணைப்பு

நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் மற்றும் கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தீர்மானமிக்க கூட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகிறது.


கோவிட் பரவல் தடுப்பு செயலணியின் குறித்த கலந்துரையாடலானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகின்றது.


குறித்த கலந்துரையாடலானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் வைத்தியசாலைகளில் இடவசதி பற்றாக்குறை மற்றும் கோவிட் மரணங்களின் அதிகரிப்பு என்பன தொடர்பில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த கூட்டத்தில் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகல தரப்பினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.


மேலும் இலங்கையில் கோவிட் பரவல் நிலைமை தீவிரமடைந்து வரும் சந்தர்ப்பத்தில் நாட்டை கடும் கட்டுப்பாடுகளுடன் முடக்க வேண்டும் என சுகாதார தரப்பினை சேர்ந்த பலர் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.