வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 11, 2021

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.


இதேவேளை கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தபோதும் தமிழரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.