யாழில் இளைஞர்களின் மோசமான செயல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 14, 2021

யாழில் இளைஞர்களின் மோசமான செயல்

 


யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நாலு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


சுன்னாகம் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் திருட்டு இடம்பெற்றிருந்தது.


அதுதொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்ததுடன் திருட்டுப்போன பொருள்களையும் அவர்களிடம் கைப்பற்றியுள்ளனர்.


சந்தேக நபர்கள் இருவருக்கும் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புள்ளமை விசாரணைகள் தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.