2012 வெலிக்கடை சிறைச்சாலைபடுகொலையின் முக்கிய சாட்சியான சுதேஸ் நந்திமல் சில்வாவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் முக்கிய சாட்சி மீண்டும் மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனகபெரேரா தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தையில் அவர் வசிக்கும் பகுதிக்கு சென்ற இருவர் சுதேஸ் சில்வா எங்கே என அயலவர்களை விசாரித்து, அவரின் உயிருக்கு ஆபத்துள்ளது என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளனர் எனன சேனக பெரேரா கூறினார்.
மவுண்ட்லவேனியாவில் உள்ள சில்வாவின் வீட்டிற்கு சென்ற சிலர் அவர் எங்கே என விசாரித்துள்ளதாகவும் சேனக பெரேரா கூறினார். இதனை தொடர்ந்து தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் அது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.