நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 18, 2021

நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

 


கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

அதேநேரம் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

மேலும், கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் கடுமையான சுகாதார வழிகாட்டல்களின் கீழ் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.