யாழில் பனையில் ஏறி நுங்கு வெட்டச் சென்றவர் பனை மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமரணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 2, 2021

யாழில் பனையில் ஏறி நுங்கு வெட்டச் சென்றவர் பனை மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமரணம்!

 பனை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை 4 மணிக்கு குறித்த நபர் நுங்கு வெட்டுவதற்கு காட்டிற்கு தனியாகச் சென்றுள்ளார்.


அதனைத் தொடர்ந்து அவர் பனையில் ஏறி நுங்கு வெட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இந்த நிலையில் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.இதனை அவதானித்த கடற்றொழிலுக்கு சென்றவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து, அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


எனினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மாரிமுத்து அருமைராசா (வயது 54) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


வட்டுக்கோட்டைப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.