யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் கொவிட் நோயாளி என நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரிகளினால் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
73 வயதுடைய இந்த பெண் உயிரிழந்த பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த 5 பேரும் வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.