இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத்தால் வவுனியாவில் ட்ரோன் கமரா மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை நேற்று (10) காலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் வைத்து இராணுவத்தால் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்டதுடன் இதன்போது நகரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
மேலும் வீதியில் நடமாடுபவர்களை இராணுவத்தினரின் ஊடகப்பிரிவினரும் புகைப்படம் மற்றும் காணொளியும் பதிவு செய்திருந்தனர்.