உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரேமண்ட் ரபேல் – சோஜா தம்பதிக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி என பெயர் கொண்ட அந்த சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்துவிட்டு, ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி ஒரே நாளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.