கைது செய்யப்பட்ட சங்கிலி திருடர்களிடமிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 10, 2021

கைது செய்யப்பட்ட சங்கிலி திருடர்களிடமிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!

 மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி சங்கிலி திருடர்கள் மோட்டர் சைக்கிள் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும் பெண்களை கொள்ளையர்கள் இலக்குவைத்து மோட்டர் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து அவர்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடிவருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது

கைக்குண்டு,மட்டக்களப்பு காத்தான்குடி சங்கிலி திருடர்கள் மோட்டர் சைக்கிள் தாளங்குடா, பூநொச்சிமுனை battinews, batticaloa news, today tamil news

இந்த நிலையில் நேற்று தனிமையில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டர்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் காத்தான்குடி பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 20,19 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் அறுக்கப்பட்ட 2 பவுண் தங்கச்சங்கிலி ஒன்றையும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டனர். சங்கிலி திருடர்கள்

கைக்குண்டு,மட்டக்களப்பு காத்தான்குடி சங்கிலி திருடர்கள் மோட்டர் சைக்கிள் தாளங்குடா, பூநொச்சிமுனை battinews, batticaloa news, today tamil news ,மட்டக்களப்பு , காத்தான்குடி, பொலிஸ், தாளங்குடா, பூநொச்சிமுனை , கொள்ளையர்கள், மட்டக்களப்பு செய்திகள், battinews, batticaloa news , today tamil news, சங்கிலியை அறுத்த

இதில் கைது செய்யப்பட்ட சங்கிலி திருடர்கள் களிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டர் சைக்கிளினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.