பன்னிப்பிட்டியில் வீதியில் ஒருவரை சரமாரியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணையைத் தொடர்ந்து வீடியோவில் காணப்பட்ட போக்குவரத்து அதிகாரி மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஒழுக்கமான பொலிஸ் படையை உருவாக்குவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் உறுதியளித்திருந்த நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.