கோவிட் தொற்று சிகிச்சையின்போது தாம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 23ஆம் திகதியன்று கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு அமைச்சர் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சில வாரங்களாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதன்போது சுவாசிப்பதற்கு செயற்கை சுவாச கருவியின்( வென்டிலேட்டரின்) உதவியை அவர் எவ்வாறு பெற வேண்டும் என்பதை விளக்கினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் தாம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக அவர் தெரிவித்தார்.
தமது உடல்நிலை மோசமடைந்து வருவதை தம்மால் காண முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தம்ம காப்பாற்றிய தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையின் மருத்துவர்கள், உள்ளிட்ட முன்னணி பணியாளர்கள், “பூமியில் வாழும் தெய்வங்கள்”என்று அவர் குறிப்பிட்டார்.