கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட இளைஞன் விபத்திற்குள்ளாகி பலி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 10, 2021

கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட இளைஞன் விபத்திற்குள்ளாகி பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனத்துடன், மோட்டார்சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.


இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


மோட்டார்சைக்கிள் கனரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த குணராஜா ஜெனோயன் (20 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் பலியான இளைஞனின் சடலம் கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.