அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 52 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 18, 2021

அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 52 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு

 ஸ்பெயின் அருகே, அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 52 அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.ஆப்ரிக்காவில் இருந்து அகதிகளாக சென்ற 52 பேர் கிரான் கனரியா தீவுக்கு அருகே கடலில் சிக்கிக் கொண்டனர்.


இந்த நிலையில், கடும் குளிரில் தத்தளித்த அவர்களை கடலோர காவல்படையினர் பபாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


அவர்களில், மிகவும் கவலைக்கிடமாக இருந்த 2 வயது சிறுமிக்கு உடனடியாக சி.பி.ஆர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவருக்கு உயிராபத்து ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.


சிறுமியைப் போலவே உடல் வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்த கர்ப்பிணி தாயொருவரும் 6 சிறுவர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.