தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 27, 2021

தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!




அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!!

கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான  46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.

இத்தீர்மனத்தின் மூலம் தமிழீழ மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், சிறீலங்கா அரசு தோல்வியடைந்துள்ளது என்றும் பலர் தமிழ் பேசும் உலகில் விளித்துக்கொள்ளும் அவலத்தையும் நாம் பார்க்கின்றோம். இந்நிலையில் தமிழீழ மக்களின் மீது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழினவழிப்பிற்கு எதிராகவும், தமிழீழ மக்களின் இறையாண்மையை வென்றெடுப்பதற்காகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுகொண்டிருக்கும் தமிழர் இயக்கம் இவ்வூடக அறிக்கையினூடாக ஓர்  கோட்பாடுசார் தெளிவூட்டலை மக்கள் முன் நிறுவுகின்றோம்.

இத் தீர்மானத்தின் இன்றைய தன்மையை ஆராய்வதற்கு முன் இதன் முந்தைய தீர்மானங்களின் அடிப்படையை நாம் சரியாக உள்வாங்குதல் அத்தியாவசியமானதாகும். முந்தைய தீர்மானங்களான 19/2  22 March 2012, 22/1 – 21 March 2013, 25/1 – 27 March 2014, 30/1 – 1 October 2015, 34/1 – 23 March 2017, 40/1 – 21 March 2019 தீர்மானங்களில் தமிழ் என்ற சொற்பிரயோகம் பாவிக்கப்படவில்லை. மாறாக இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் என்றே குறிப்பிடப்பட்டன. தமிழர்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற  தமிழின அழிப்பை  பார்க்கத் தவறிய இத் தீர்மானங்கள் தமிழீழ மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக எதிர் நோக்கும் திட்டமிட்ட தமிழினவழிப்பை மூடி மறைத்துள்ளது. இதனூடாக இனவழிப்புக் குற்றவாளியான சிறீலங்காவை தப்பிக்க வழிவகுத்ததுடன் தொடர்ச்சியான தமிழினவழிப்பை தொடர சிறிலங்காவிற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது எனக் கொள்ளலாம். 2012 அம் ஆண்டு வெளிவந்த 19/2 தீர்மானத்தில் பயங்கரவாதத்தை அழித்த சிறீலங்கா அரசிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இதனூடாக இத் தீர்மானம் தமிழர்களின் இறையாண்மைக்கானதும், இனவழிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கானதுமான சுதந்திர விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து மடைமாற்றி உள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் இடம்பெற்றதாக கூறும் இத் தொடர் தீர்மானங்கள், அக்குற்றங்கள் யார்மீது பிரயோகிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. அவ்வழியில் தமிழர்கள் தான் பாதிப்புக்குள்ளானர்கள் என்று சுட்டிக்காட்டத் தவறியுள்ள இப்   புதியதீர்மானம்    கூட      தமிழ்த்தே சிய இனத்தை வலுக்கட்டாயமாக சிறீலங்கர்களாகவே அடையாளப்படுத்த முனைகிறது.

இனவழிப்பு அரசாங்கமான சிறீலங்காவின் இறையாண்மை மீதும், ஒருமைப்பாட்டின் மீதும் முழத்திற்கு முழம் கரிசனை கொண்டு வெளிவந்துள்ள இத்தீர்மானம், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இறையாண்மையின் கீழ் ஓர் தேசிய இனமான தமிழீழ மக்களின் இறையாண்மை மறுக்கப்பட்டு திட்டமிட்ட தமிழினவழிப்பு மேற்கொள்ளப்படுவதை கரிசனையில் எடுத்துக்கொள்ளவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கவோ, கண்டுகொள்ளவோ முன்வரவில்லை.

இவ்வாறாக தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முற்றாக மறுத்துள்ள இத் தீர்மானங்களின் முக்கிய பகுதி ஒன்றை தமிழீழ மக்கள் மிகவும் ஆழமாக உற்று அவதானிக்க வேண்டும். கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இப்பந்தி 2012 தொடக்கம் 2021 வரை வெளிவந்த அனைத்து தீர்மானங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Stresses the importance of a comprehensive accountability process for all violations and abuses of human rights committed in Sri Lanka by all parties, including those abuses by the Liberation Tigers of Tamil Eelam, as highlighted in the comprehensive report of the Office of the High Commissioner on Sri Lanka. 
தமிழாக்கம்: 2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் வெளியிடப்பட்ட இலங்கை குறித்த உயர் ஆணையாளரின் அலுவலகத்தின் விரிவான அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டவாறுதமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்த மீறல்கள் உட்படஇலங்கையில் அனைத்துத் தரப்பினராலும் புரியப்பட்ட அனைத்து மனி உரிமை மீறல்களுக்கும்அத்துமீறல்களுக்கும் பொறுப்புக் கூறுவதற்கான முழுமையான பொறிமுறையின் முக்கியத்துவதை வலியுறுத்துகிறது.

இப்பந்தி 23.03.2021 வெளிவந்த தீர்மானத்தின் Operative Paragraph 4 ல் அமைந்துள்ளதுஇதில் தமிழீ நிழல் அரசின் இராணுவமான தமிழீ விடுதலைப்புலிகள் மற்றும் ஏனை தரப்புகள் மேற்கொண்ட குற்றங்களை விசாரித்து விரிவான பொறுப்புக்கூறல் ஒன்றை வழங்கவேண்டும் என பரித்துரைக்கப்பட்டுள்ளதுதில் சிறீலங்கா அரசு குற்றவாளியாக சுட்டிக்காட்டப்படவில்லைவ்வாறாயின் சிறீலங்கா அரசை விசாரிக்கப்போவது யார்? 

தமிழீழ நிழல் அரசை விசாரிக்க சிறீலங்காவிடம் பரிந்துரைக்கும் சர்வதேசம் இலங்கை அரசை விசாரிக்கவும், நீதியை நிலை நாட்டவும் இனவழிப்பு யுத்தம் மூலம் நிர்மூலமாக்கிய தமிழீழ இராசதாணியை மீளமைத்து தமிழீழ நீதிமன்றத்தின் முன் சிறிலங்கா அரசை விசாரிக்கும் படி கோருவதே சரியான செயற்பாடாகவிருக்கும்.

வெளிவந்திருக்கும் இப்புதிய தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பொறுப்புக்கூறலுக்கான பரிந்துரைகளையும் இலங்கை அரசின் கூட்டிணைவுடன் உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே ஐ.நா மனிதவுரிமைகள் சபை செயற்படுத்த முனைகிறது. இதனூடாக குற்றவாளியான இலங்கை அரசிடமே தான் செய்த குற்றத்தை விசாரணை செய்யும்படியும், பொறுப்புக்கூறும்படியும் ஐ.நா மனிதவுரிமைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. குற்றமிழைத்தவரை நீதி வழங்க அழைப்பது அடிப்படை சட்டக் கோட்பாடுகளை மீறும் செயலாகும். குறிப்பாக “தமிழினவழிப்பை அங்கீகரியுங்கள், ஓர் அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்துங்கள், அதன் வழியில் அனைத்துலக நீதிமன்றிலோ அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிலோ    பாரப்படுத்துங்கள்” போன்ற  இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களின் கோரிக்கைகள் எதுவும் கருத்தில் கொள்ளப்படாமல், அவர்களின் வகிபாகம் இல்லாமல் வெளிவந்திருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானமானது ஐநா மனிதவுரிமைகள் சபையின் சரத்துக்களை மீறும் செயலாகும்.

இத்தீர்மானத்தின் ஊடான பன்னாடுகளின் அழுத்தம் என்பது சிறீலங்கா ஈட்டிய வெற்றியே. ஏனெனில் இனவழிப்பு குற்றங்களில் இருந்து 22 நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு தப்பித்துக்கொண்டுள்ளது. இதையே தாம் சாதித்த வெற்றியாக எம்மினத்தில் சிலர் கூறியும் வலம் வருகின்றனர்.

இதனால் இத்தீர்மானத்தினை தமிழர் இயக்கம் வரவேற்கவில்லை என்பதனை உலகத் தமிழர்களின் ஆதரவுடன் அறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இத்தீர்மானத்தை வரவேற்று தமிழினவழிப்பை மூடி மறைப்பதற்கும் தமிழர்களின் இறையாண்மைக்கான சுதந்திர விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியாக நிராகரிப்தற்கும் துணைபோக வேண்டாம் என்று தமிழ் அமைப்புக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இத்தீர்மானத்தை வரவேற்பது இனவழிப்பின் 10வது படிநிலையான மறுதலிப்பிற்கு சமமாகும். 

சிறீலங்கா அரசின் இனவழிப்பை வெளிக்கொணரவும், அதற்கான அனைத்துலக நீதியை நிலை நாட்டவும் எதிர்வரும் 18 மாத கலாத்திற்கான சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றையும் தமிழர் இயக்கம் நாம் முன்னெடுத்துள்ளோம். அதற்கான உங்கள் தார்மீக ஆதரவுகளையும் உதவிகளையும் இச்சந்தர்ப்பத்தில் அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

வெல்வது உறுதி தமிழர் இயக்கம்

www.tamilmovement.com/


https://www.youtube.com/watch?v=xTMFyooHvdg