என்னுடைய மனைவியின் கள்ளக்காதலன் என்னை கொல்ல பார்க்கிறான் என்னை காப்பாற்றுங்கள் - கணவன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 1, 2021

என்னுடைய மனைவியின் கள்ளக்காதலன் என்னை கொல்ல பார்க்கிறான் என்னை காப்பாற்றுங்கள் - கணவன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

ஆற்காடு அருகே மனைவியின் கள்ளக்காதலன் கொலை மிரட்டல் விடுத்ததால், கணவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 44 வயதாகும் சதீஷ்குமார். சதீஷ்குமாருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், சதீஷ்குமாரின் மனைவிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.


மனைவியின், கள்ளக்காதல் பற்றி அறிந்த சதீஷ்குமார் பல முறை எச்சரித்தும் சிலம்பரசனுடனான தொடர்பை மனைவி கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் தனது 6 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சதீஷ்குமாரின் மனைவி, கள்ளக்காதலன் சிலம்பரசனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
 

இதனால் விரக்தி அடைந்த சதீஷ்குமார் பலமுறை போலீசாரிடம் தனது மனைவியை மீட்டுத்தருமாறு புகார் மனுவை அளித்துள்ளார். மேலும் தனது உறவினர்கள் மூலமாக மனைவியை மீட்க பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.


இந்தநிலையில், சிலம்பரசனும், தியேட்டர் உரிமையாளருமான அவரது தந்தை ஆற்காடு ராஜாவும், சதிஷ்குமாரை மிரட்டி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வேறு வழியின்றி, ஆற்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தனது சாவிற்கு காரணம் தியேட்டர் வைத்திருக்கும் ராஜாவும் அவரது மகனான சிலம்பரசனும் தான் என்று ஒரு போர்டில் எழுதி டவரில் கட்டியுள்ளார்.


இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ்குமாருடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு கட்டத்தில், மனம் இறங்கிய சதீஷ்குமார், டவரில் இருந்து மெல்ல கீழே இறங்கி வந்தார். ஆற்காடு பகுதியில் நடைபெற்ற இந்த வித்யாசமான போரட்டம் போலீசாரை புலம்ப வைத்துள்ளது.