தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியை தலை நசுங்கிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் ராமகிருஷ்ணாபுரத்தில் தலை நசுங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சடலமாக கிடந்தவர் ஆசிரியர் சிவக்குமார் என்பதும் ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த அவரை மர்ம கும்பல் கடத்திச் சென்று கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
சிவக்குமாருடன் பணிபுரிந்த பள்ளியில் உள்ள மற்றொரு ஆசிரியை லட்சுமியின் கணவரை பிடித்து விசாரித்த போது கொலை தொடர்பான மர்மம் விலகியது.
பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கும் அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் லட்சுமி என்பவருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.
கணக்கு பாடத்தை மறந்து சிவக்குமார் நடத்திய காதல் பாடத்தில் மயங்கிய லட்சுமி பல இடங்களில் அவருடன் உல்லாசமாக சுற்றித்திரிந்து உள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமியின் காதல் கணவர் இளங்கோ, சிவக்குமாரை சந்தித்து நாங்கள் ஏற்கனவே காதல் செய்து சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளோம் எங்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் சிவக்குமார் லட்சுமியுடனான தொடர்பை விடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, கூலிப்படை கும்பலை வைத்து சிவக்குமாரின் கைகால்களை உடைத்து ஒரே இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி ஊத்தங்கரை இலங்கை தமிழர் முகாம் பகுதியில் வசித்து வரும் பிரபல ரவுடி வெள்ளைச்சாமியை சந்தித்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்து கணக்கு வாத்தியாரின் கை கால்களை உடைக்க கூறியுள்ளார்.
சம்பவத்தன்று ஆசிரியர் சிவக்குமார் மோட்டார்சைக்கிளில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்த 8 பேரும் சிவக்குமாரை மோட்டார்சைக்கிளில் இருந்து இறக்கி காரில் கடத்தி ராமகிருஷ்ணாபுரம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கை, கால்களை கட்டி லொறியை ஏற்றுவதற்காக ஓட்டி வந்துள்ளனர்.
அப்போது கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழப்பதற்காக சிவக்குமார் உருண்டு புரண்டபோது அவரது தலையில் லாரி ஏறி இறங்கியது. இதில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார். அதன்பின் கூலிப்படையினர் தப்பியோடிவிட்டனர்.
முன்னதாக ஆசிரியர் சிவக்குமார் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது அவர் ஆசிரியை லட்சுமி மட்டுமல்லாமல் மேலும் 5 பெண்களுடன் தொடர்பில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் கர்ப்பத்தை கலைக்க கணிசமான தொகையை கொடுத்து தனது செல்வாக்கால் தப்பியதும் தெரியவந்ததால், இவர்களில் சிவக்குமாரை கொன்றது யார் என்பதை கண்டுபிடிப்பது பொலிசாருக்கு கடும் சவாலாக இருந்துள்ளது.
இவர்களில் ஆசிரியை லட்சுமியின் கணவர் இளங்கோ ரவுடி வெள்ளச்சாமியுடன் பேசிய சொல்போன் தொடர்புகள் மூலம் கொலை சம்பவம் துப்பு துலங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.