இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த பரிசோதனைகள் இன்று முதல் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறதாகவும் அவர் கூறினார்.