இலங்கையில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, January 28, 2021

இலங்கையில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

 இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது தடுப்பூசி இராணுவத்தினர் மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.


மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.