முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவளை வித்தியானந்தக்கல்லூரி மைதானத்திலிருந்து பெருமளவான ஆட்லறி எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போதே பெருமளவிலான எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
படையினரின் ஏற்பாட்டில் குறித்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அகழ்வு நடவடிக்கையின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.