சிங்கள பௌத்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடமளிக்க வேண்டாம் ! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 15, 2021

சிங்கள பௌத்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடமளிக்க வேண்டாம் !

இலங்கை காவல்துறையின் சட்டப் பிரிவை வலுப்படுத்த 150 சட்டத்தரணிகளை காவல்துறை தலைமை ஆய்வாளர் பதவிக்கு நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், அங்கு தமிழ் மொழி புலமைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அவர்களைப் சேவையில் ஈடுபடுத்துவதே அதற்கான காரணம் ஆகும்.


இருப்பினும் ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் மூலம் சிங்கள பௌத்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளம் சட்டத்தரணிகளுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குவதை புறக்கணிக்குமாறு தெரிவித்துள்ளது.


அத்தோடு அரச அதிகாரிகளை பணியில் சேர்த்துக்கொள்ளும்போது இனம், மதம் மற்றும் மொழி அடிப்படையில் பாகுபாடு காண்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், இந்த 150 பேரை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடி நேர்காணல்கள் மூலம் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதல்ல என்றும் ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.


மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு 5 வருட காலம் நாட்டை ஒப்படைத்தது இதுபோன்ற சூழ்நிலையை எதிர்பார்த்து அல்ல என அந்த அமைப்பின் தலைவர் புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.


எனினும் இந்த ஆட்சேர்ப்பு நடைபெற அனுமதிக்கப்பட்டால், இன்னும் 10-15 ஆண்டுகளில், அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் முஸ்லிம்களாகவும், தமிழர்களாகவும் மாறும் அபாயம் இருக்கும் என்று கூறும் புதுகல ஜினவங்ச தேரர் இது சிங்கள பௌத்த மக்களை அழிக்க ஒரு சதித்திட்டத்தின் மற்றொரு பகுதியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.