வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 ஆயிரத்து 137 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 387 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 164 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 750 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 289 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் 7 ஆயிரத்து 187 குடும்பங்களை சேர்ந்த 23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.