கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்றவர் பொலிஸாரினால் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, January 3, 2021

கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்றவர் பொலிஸாரினால் கைது!

 கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணா அம்மானை சந்திக்க சென்றவரை, கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோது, அவரிடமிருந்து குறித்த கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் கைது செய்யப்பட்டவரிடம் தொடர் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டபோது, குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசைளை இடுவதற்காக எடுத்து சென்றதாகவும், திரும்பும் வேளையில் கருணா அம்மானை சந்தித்து செல்ல சென்றதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.