விரைவான அன்ரியன் பரிசோதனையில் கர்பிணி பெண்ணொருவர், கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா வேப்பங்குளத்தின் சில பகுதிகள் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன.
வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிபெண் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அன்ரியன் பரிசோதனை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அதில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த பெண்ணின் இருப்பிடமான வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கை மற்றும் 2,3,4 மற்றும் 5 ஆம் ஒழுங்கை பகுதிகள் பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணுக்கு அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டபோதே தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
எனினும் குறித்த பெண்மணி வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பி.சி.ஆர்.முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்தார்.