யாழ். வந்த பல்கலைக் கழக மாணவிக்கு கொரோனா தொற்று! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 22, 2021

யாழ். வந்த பல்கலைக் கழக மாணவிக்கு கொரோனா தொற்று!

வடக்கில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வு கூடத்திலும், யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்திலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இவர்களுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குக் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர் பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக முகாமைத்துவபீட மாணவியாவார்.

மாத்தளையைச் சேர்ந்த இவர் கற்றல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவர் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அதில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி, பூநகரியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தினர் என்றும், கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் கொழும்பில் இருந்து வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், கொரோனாத் தொற்று அபாய வலயங்களில் இருந்து வருவோரைத் தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் சில நாள்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புக்கமைய இந்த நடவடிக்கை நிறுத்தப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிற மாகாணங்களில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.