கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியை அடையாளம் காண உதவுங்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 19, 2021

கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியை அடையாளம் காண உதவுங்கள்!

பூனானி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிசிக்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.நேற்றிரவு 7.30 மணியளவில் தொற்றாளர் தப்பிச் சென்றுள்ளாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தப்பி சென்றவர் 43 வயதுடைய எஹேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“2021.01.13 அன்றைய தினம் குறித்த நபர் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுததியாகியுள்ளது.

அதற்கமைய 17ஆம் திகதி அவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பூனானி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில்நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த நபர் சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கொலன்னாவை, மீதொட்டமுல்ல, விஹார மாவத்தையில் உள்ள பேக்கரி பணியாற்றும் ஒருவராகும். அவர் 43 வயதுடைய ஷெல்ட்ன பிரேமரத்ன என்பவராகும். அவர் மதுபோதைக்கு அடிமையாகிய ஒருவராகும்.

இரண்டாவது கொரோனா அலையின் பின்னர் 14 நோயாளிக் இவ்வாறு தப்பி சென்றுள்ளனர். அவ்வாறு தப்பிச் சென்ற அனைவரும் போதைபொருளுக்கு அடிமையானவர்கள்.

குறித்த புகைப்படத்தில் உள்ள கொரோனா நோயாளி தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

071 859 11 38 என்ற வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு அல்லது 119 அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்த முடியும்” எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.